CALL US: 9360574545
Useful Links   |   Download
   
 
 


Arunai Clock

 

 

 

 

 
 
 

 

 

Travel

 

Places of Interest
Mainly In India and also Abroad

 

பஞ்ச பூதத் திருத்தலங்கள் எங்கெங்கே?

- Prof GRK

திருக்காளதி[ஆந்திரா], சிதம்பரம், திருவானைக்கா,திருவண்ணாமலை,காஞ்சிபுரம்

திருவண்ணா 'மலை'யில் அபூர்வமான மூலிகைக் காடுகள் இருப்பதாகவும் அந்தக் காற்று பட்டாலே பல நோய்நொடிகள் குணமாகுமென்றும் சொல்கிறார்களே, அது பற்றி ஏதேனும்சொல்ல முடியுமா?

கடந்த ஆண்டு திருவண்ணாமலை சென்றிருந்தபோது, இரமண மக‌ரிஷிகள் திருவண்ணாமலை வந்த சமயம் மலையில் ஒரு குகைப்போன்ற இடத்தில் தங்கித்தான் தியானம் செய்துள்ளார்.  இப்போதும் அந்த இடம் உண்டு. அதனை கந்தர் ஆசிரமம் என்பார்கள்.  கந்தர் ஆசிரமத்திற்கு நானும், மற்றும் இரண்டு நண்பரும் சென்றோம்.  போகும் வழியில் நிறைய குரங்குகள் மரத்திலும் தரையிலும் இருந்தது. பெரிய உருவத்தில் குரங்கள் இருந்தன.  அப்போது ஒரு ஆண் குரங்கு ஒரு பெண் குரங்கை விரட்டிச்சென்று உடல் உறவு கொண்டது.

சிறிது நேரத்திற்குப்பின் [விஷயம் முடிந்தபின்] அந்த ஆண் குரங்கு சுமார் 10 அடிக்கு அப்பாலிருந்த செடிக்கு ஓடி, அதிலிருந்த காயைப் பறித்து மனிதரைப் போல் உள்ளங்கையில்வைத்து தோய்த்தது. காயினுள் மிளகு அளவில் சிறு விதை இருந்தது. விதையை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றது. இப்படி பல விதைகளை சாப்பிட்டது.  இதனை பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது. அருகிலிருந்த நண்பரிடம் கேட்டேன். அவர் மூலிகைப் பற்றி அறிந்தவர். செடியின் அருகில் சென்று விதை எடுத்து காட்டி சாப்பிடும்படி கூறினார். நான் தயங்கினேன். அவரே அதனை சாப்பிட்டார்.  அவர் கூறிய விபரம் என்க்கு வியப்பை அளித்தது. அந்த விதை ஆண்மைக்கும், வீரியத்திற்கும் உரியது என்றார். மிருகங்களுக்கு கூட இயற்கைப் பற்றி தெரிந்து இருக்கிறது. அடுத்து ஒரு மரத்தில் விழுதுகள் போல் சில கொடிகள் தொங்கின. பொன் நிறத்தில் அந்த விழுதுகள் இருந்தன. அவைகள் மரத்தில்தான் வளருமாம். வேர்கள் இல்லை.  அதனை எடுத்து நிழலில் உலரவைத்து சூரணம் செய்து சாப்பிட உடல் பொன் நிறமாகும் என்றார்.

சீனத்திலிருக்கும் ஜிங்சிங் வேர் போன்ற தன்மை உள்ளதாம். மற்றும் ஒரு செடியினைக் காட்டி, காயம்பட்ட அல்லது வெட்டுப்பட்ட இடங்களில் இந்த செடியின் இலையை வைத்துக் கட்டினால் உடன் காயம் ஆறும் என்றார்.  ஆனால்.... இலையை தவறாக பின்புறம் வைத்து கட்டிவிட்டால் காயம் இரணமாக மாறிவிடும்.

இப்படி பல மூலிகைச் செடிகளை காட்டி அவற்றின் பயன்களைக் கூறினார். காலில் மிதிபடும் அளவுக்கு நிறைய மூலிகை பரந்து கிடக்கிறது.நாம்தான் கண்டுக்கொள்வதில்லை. தங்க சுரங்கத்தின் மீது குடிசைப் போட்டுக்கொண்டு வாழ்கிறோம்

பௌர்ணமி இரவுகளில் அங்கே தங்குவது இளையராஜா போன்ற சினிமாப் பிரபலங்கள் சமீபத்திய காலங்களிலேற்படுத்தி விட்ட வழக்கமா?

சுமார் 1 1/2 ஆண்டுகளுக்கு முன் மண்டபத்தில் தீப்பற்றி முழுதுமாக எரிந்துவிட்டது. 100 ஆண்டு பழைமையான கொடி மரமும் சாய்ந்துவிட்டது. ஆகவே, திருப்பணி செய்ய வேண்டி இருந்ததால் ஒரு கமிட்டி அமைத்தார்கள். அதற்கு இளையராஜாவை தலைவராக போட்டார்கள். முன் கோபுரம் சீர் செய்ய சில இலட்சம் இளைய ராஜா கொடுத்தார். இளைய ராஜாவுக்கு ஆன்மீக எண்ணமும், உணர்வும் இருப்பதால் திருவண்ணாமலை செல்வதிலும், தங்குவதிலும், கிரிவலம் வருவதிலும் வியப்பில்லை. மேலும் சென்னையிலிருந்து மூன்று மணி நேரத்தில் திருவண்ணாமலையை அடைந்துவிடலாம்

கிரிவலம் என்றால் திருவண்ணாமலை. திருவண்ணாமலை என்றால் கிரிவலம் என்ற அளவுக்கு இன்று புகழ் பெற்றிருப்பது திருவண்ணாமலை. ''ஸ்மரணாத் அருணாச்சலம்'' .... நினைத்தலே முத்தி தரும் என்று சொல்லபட்ட பஞ்ச பூதங்களில் ''தேயு''த்திருத்தலம் திருவண்ணாமலையாகும்.
 
திருவண்ணாமலை கிரிவலம் பிரபலம் அடைந்தது ''அருணாச்சலம்'' திரைப்படத்திற்குப் பின்தான் எனலாம். இந்த படவெற்றிக்குப் பின் ரஜனி கிரிவலம் சுற்றிப் பாதையில் நள்ளிரவிலும் நல்ல ஒளி உமிழும் மின்சார விளக்கு,செப்பனிட்ட புதிய தார் போட்ட சாலை. மேலும் பலர் சொல்லியும், கிரிவலம் செய்து நன்மையடைந்த பக்தர்கள்தான். ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலத்துக்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. குறையவில்லை. பல ஊர்களிலிருந்து சிறப்பு பேருந்து, சிறுவகை மோட்டார் வண்டிகள்.[டெம்போ] டிராக்டர், வாடகை வண்டிகள் மூலம் மக்கள் வந்து கூடுகிறார்கள். [சுமார் 5, 6 இலட்சம் மக்கள் கூடுகிறார்கள்.]

பக்தி வளர்ந்த அளவுக்கு மக்கள் மனம் பக்குவம் அடையவில்லை எனலாம். கிரிவலம் சுமார் 14 கி.மை. சுற்றளவு. இந்த 14 மைல் சுற்றி அளவு சாலை இருபுறமும் பலவித அங்காடி கடைகள். சாப்பாடு கடைகள்.

மக்கள் ஏதோ உல்லாச பிரயாணம் போல்... பிக்கினிக்கு செல்வது போல் வெட்டி பேச்சு... வெட்டிக் கதைகள் பேசி, ஆணும்-பெண்ணும் அச்சமின்றி சப்தமிட்டு சிரிப்பது... ஆளை இடித்துக்கொண்டு செல்வது...

நமக்கிருக்கும் ஆன்மீக எண்ணத்தினை, உணர்வை சிதற   செய்து விடுகிறது. இதனையும் மீறி சென்றுவிடும் கில்லாடிகளும் உண்டு.
------------ --------- --------- --------- -------
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போலே
நண்ணிய நின் முனிங்கு
நசித்திடல் வேண்டும் மன்னாய்...!

              -- பாரதி --

-: -:-:-:-:-


Visiting places - a village, a town, a citiy, snow clad hill stations, forts, palaces, caves, rivers, backwaters, beaches, temples, mountains & forests... known for historical, geographical, cultural, art & paintings, spiritual, worship, heritage etcetera has the potential to give you knowlegde. Eyes and mind makes you learn and retain memories vividly, especially this is true in children. You could be watching many foreign tourists come to India and they too keep visiting places and countries in a planned way almost every year. They make it by saving a portion for travel and liesure.

You find some links below, in this page and will grow. VISITORS ARE REQUESTED TO SEND MAILS INFORMING ABOUT INTERESTING PLACES - NAMES, LOCATIONS, WEB SITE LINKS IF ANY OR A BRIEF NOTE ON EACH.


Links to
Web Sites
Places to Visit,
Natural Attractions..
Hill Stations: Ooty, Wayanad, Kodaikanal and Munnar
Monsoon visit: Jog Falls, Karwar and Goa

Picnoc & around Bangalore: Muthyala maduvu, Nandhi hills, Ranganathittu bird sanctuary, Chunchi falls, Gaganachukki & Bharachukky water falls,

NEW ON 01-08-2010 >>>>>
Magnificent temples of india -
View the Power Point Presentation
that includes TV Malai Tempe

Vsit Sky Park in Singapore
See the Pictures Below.

Here is the YouTube video of the same Sky Park. You can see it is safe to swim in the Singapore pool.
http://www.youtube. com/watch? v=VEr0QNuLip4

On June 24, opened a new wonder of the world. " Sky Park " Marina Bay Sands is located on the 200-meter height on the three skyscrapers, as if on three pillars. Here is the most expensive in the world of casinos, bars, restaurants, the largest outdoor
swimming pool, 150 meters long and even the Museum of Modern Art.














 

 
 

 
     

| Site Map | Privacy | Credits | About ACT | About AFA | Awards & Recognitions | External Links | Students' Corner | TPR Community | Self Help | Member Contributions | Contact |

    Copyright © 2004-to-date. Arunai Charitable Trust. All Rights Reserved.  This Web site is designed and maintained by D. SELVARAJ