Have you read all the Tips below (more TIPs on next page)
> more Tips in <2> <3>
Tip 10: கொய்யா... மாதுளை..!
- Arun Kumar

கத்திரி வெயில் சருமத்திற்கு இஸ்திரி போட்டது போல் உடம்பில் சூடு பறக்கிறது. இந்த சமயத்தில் நாம் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு பழங்கள் தான். இதை திரவ உணவாக ஜுஸாக சாப்பிட்டாலும் நல்லது. அல்லது பழமாக சாப்பிட்டாலும் நல்லது. உடல் சூடும் குறையும். வயிற்றுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும், சில பழங்களை தவிர்ப்பதும் அவசியம்.
தற்போது மாம்பழ சீசன் என்பதால் ஆசைப்பட்டு அதிகம் சாப்பிடவேண்டாம். அளவோடு மாம்பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் நமது ரத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல பலம் கிடைக்கும். மாம்பழம் அதிகம் சாப்பிட்டாலோ உடல் சூடு அதிகமாகும்.
தினமும் இரவு உணவிற்குப் பின் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன், அவர்களுக்கு தினசரி ஒரு செவ்வாழைப் பழம் கொடுத்து வந்தால் கண்பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும். கோடை காலம் அடிக்கடி வயிற்றுப்போக்கையும் உண்டாக்கும். ரஸ்தாளி வாழைப் பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப் போக்கு நின்று விடும்.
கொய்யாப்பழத்தை குழந்தைகள் அடிக்கடி சாப்பிட வேண்டும். இதில் சி உயிர்ச்சத்து அதிகம். வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் சி, எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கிறது. தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும்.
எப்போதும் கிடைக்கக் கூடிய பழம் பப்பாளி. இதில் வைட்டமின் ஏ நிறைய உள்ளதால் பல் சம்பந்தமான குறைபாடு நீங்கும். சிறுநீர் பையில் உண்டாகும் கல்லை கரைக்கும். ஆனாலும் சூடு அதிகம் என்பதால் அளவோடு சாப்பிடவும். அடிக்கடி பப்பாளி சாப்பிடுபவர்களை தொற்று நோய் தாக்கும் வாய்ப்பு குறைவு.
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி அதிகளவில் உள்ளதால் ரத்தம் விருத்தியாகி உடல் பலம் பெறும். புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு அன்னாசி பழம் பயன்படுகிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப் பழம் ஒரு சிறந்த டானிக். அடிக்கடி அன்னாசி பழம் சாப்பிடுபவர்களுக்கு பித்தம் தொடர்பான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
விளாம்பழத்தில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளன. பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், வாய் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை, கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, ருசியின்மை ஆகிய பிரச்சினைகளை குணப்படுத்தும் ஆற்றல் விளாம்பழத்திற்கு உண்டு. ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதியிழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
மாதுளம்பழத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும். அதே போல் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். பித்தம் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும். இதயம், குடல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் நன்றாக இயங்க மாதுளம் பழச்சாறு மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் குளுகோஸ் சக்தி அதிகம் இருப்பதால் உடல் சோர்வை உடனடியாக நீக்கும் தன்மை கொண்டது.
தினமும் வழக்கமாக உண்ணும் உணவை குறைத்து, பழங்களை அதிகமாக சேர்த்துக் கொண்டால் வெயில் காலத்தில் நம் உடல் சமநிலைக்கு கொண்டு வரப்படும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் வராது. அதுமட்டுமின்றி, இந்த பழங்கள் உடலுக்கு பலமும் சேர்க்கும்.
Tip 9: இஞ்சி... சுக்கு... கடுக்காய்?
தினமும் காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்று இன்றைக்கும் கிராமத்தில் பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி என்னதான் செய்கின்றன அவை?
சின்ன சின்ன துண்டுகளாக இஞ்சியை காலையில் சாப்பிடலாம். இல்லாவிட்டால் இஞ்சி சாறு எடுத்து, அஞ்சு நிமிஷம் அப்படியே வைத்தால் அடியில் வெள்ளையாக படியும். மேலே தெளிந்த சாறை மட்டும் குடித்தால் உடல் சுறுசுறுப்பாகும். வாய்வுத் தொல்லை, அஜீரணக்கோளாறு, சளித் தொல்லை எதுவும் எட்டிப் பார்க்காது.
பகலில் சுக்கு மல்லிக் காபி சாப்பிட்டு வந்தால் சளி, காய்ச்சல், இருமல், வாய்வுப் பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும். அதேபோல், ராத்திரியில் தூங்குவதற்கு முன்பாக கடுக்காய் சாப்பிடுவது நல்லது. இரண்டு, மூன்று கடுக்காயை இடித்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சவும். அவை பாதியாக சுண்டிய பிறகு, நன்கு ஆற வைத்து குடிக்கவும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை, மூலம் ஆகிய தொந்தரவுகள் குறையும்.
Tip 8 : கண்களை காக்கும் காய்கறிகள்
- R. ArunKumar

பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன.
பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.
குறைந்த பட்சம் வராத்திற்கு இரண்டு தடையாவது கிரை சேர்க்க வேண்டும் . அகத்திக் கீரை, பசலைக் கீரை, முருங்கை, பொன்னாங்கன்னி, முளக்கீரை, அரக்கீரை, வெந்தயக் கீரை ஆகிய கீரைகளில் இரும்பு, போலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி-2 ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால் இவற்றை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
பச்சைக் காய்கறிகளுடன் சாலட் மற்றும் எலுமிச்சை நம் பார்வையை பெரிதும் கூர்மையாக்குகிறது.வைட்டமின் ஏயில் கண்ணையும், மூளையையும் இணைக்கும் முக்கிய சத்து அடங்கியுள்ளது. கண் விழித்திரையிலுள்ள ரோடோஸ்பின் என்ற புரதத்தில் வைட்டமின் ஏ உள்ளது. பார்வையில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் ஏ சத்து பற்றாக்குறையால் முதலில் தோன்றும் அறிகுறி மாலைக்கண் நோய். காரட்டில் அதிகமான வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ வாக நம் உடலில் மாற்றம் அடையும் பீட்டா கரோடின் மற்றும் அதிநிற பழங்களிலும், பச்சைக் காய்கறிகளிலும் வைட்டமின் ஏ உள்ளது.
தக்காளி, பசலை, லிவர், முட்டை, நிறமயமான காய்கறிகள், கேரட், பப்பாளி மற்றும் பச்சை இலைகளில் உள்ளது.உடலில் அதிகமாக சுரக்கும் குளூக்கோஸினால் கண்லென்ஸ் சேதமடைவதிலிருந்து புரத அமிலங்கள் நம்மை காக்கின்றன.
இறைச்சி, மீன் மற்றும் பாலில் நமக்குத் தேவையான 8 முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. அரிசி, பட்டாணி, பீன்ஸ், அவரை, மொச்சை, துவரை, உளுந்து பயறு போன்றவற்றில் இறைச்சியில் உள்ள அளவுக்கு அமினோ அமிலங்கள் உள்ளன.
Tip 7 : 1. ரத்த ஓட்டத்தை சீராக்கும் வெங்காயம்

சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் அந்த சொத்தை மறையும்.
நெல்லி இலை, மருதாணி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே அடிக்கடி வாய் கொப்பளித்து வர, வாய்வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.
வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது.
சமையலில் பிரதானமாக உபயோகிக்கப்படும் வெங்காயம் ஒரு அரு மருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள் தாக்காமல் தடுக்கும்.
வாழைப்பழங்களில் சோடியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற பல வகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இதய அழுத்தம் ஏறாமல் சீராக இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். அது ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.
Tip 7 : 2. நோய் தீர்க்கும் காய்கனிகள் - வெங்காயம்
- Prof GRK
முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள். அதில் உண்மையில்லை. அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம். இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார்.
மிகச் சிறிய குளவியோ, தேனியோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு. தேனி போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனி கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.
ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை, பச்சையாக சமைத்து, சூப் அல்லது சாலடாக்கிச் சாப்பிடலாம். வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.
இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தைக் கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது. பைப்ரினோலிசின் என்ற பொருளைச் சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்புகளைக் கரைத்துவிடுகிறது.
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களைக் கரைத்து, அழற்சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தொல்லை இருந்தால் நிறைய வெங்காயம் சாப்பிடுங்கள்; கற்கள் கரைந்து ஓடும். முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது.
வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும். எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச்சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும்.
சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளி பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.
புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது. முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன. வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதிகால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.
பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறhர்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.
Tip 6 : இப்படித்தான் பழங்களை சாப்பிடணும்

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப்போகும்.
அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும். பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜுஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
பழங்களை ஜுஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும். இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும்.
சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப்போகும்.
அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும். பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜுஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
பழங்களை ஜுஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
Tip 5 : காய்கறி பழங்களின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்
- Naveen Anandan
நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும். இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.
இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்:ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது. மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.
எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.
பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.
வெள்ளரிக்காய்: இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.
தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.
Tip 4: செலவே இல்லாத தண்ணீர் சிகிச்சை
- R. ArunKumar
உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண்ணீர்.
ஏதோ உணவு, சிற்றுண்டி சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். பல ஆயிரக்கணக்கில் பணம் கறந்து சொல்லித் தரப்படும் "வாட்டர் தெரபி' உட்பட மூலிகை தெரபிகளை நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது? நீங்கள் ஆரம்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.
என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்விïவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன்படாது. அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை.
உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் சாப்பிட்டால், வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய்வதால்தான் சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கிறது சிலருக்கு.
ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒருவேளை மட்டும் பழங்களாக சாப்பிட்டால் மிகவும் நல்லது.
Tip 3: தேநீர்'... சில உண்மை - - - - - Arun Kumar

டீ' எனப்படும் `தேநீர்' நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக' அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது தேநீர்ப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ' தவிர பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே...
* சூடான லவங்கப்பட்டை டீ, பெண்க ளுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மனஅழுத் தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டுச் சுதந்திரமாக உணர உதவும். மேலும், சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.
* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `மசாலா டீ'யும், `சிலோன் டீ'யும் இதமளிக்கும்.
`கிரீன் டீ'யில் உள்ள `பாலிபினால்கள்' அல்லது `பிளேவனாய்டுகள்' ஒட்டுமொத்த உடல்நலத் துக்கு நல்லது. குறிப்பாக புற்றுநோய் வராமல் தடுப்பதில். புற்றுநோய் போன்ற ஆபத்து களுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத் தடுக்கும் பணியில் டீயில் உள்ள `ஆன்டிஆக்சிடன்ட்கள்' உதவுகின்றன.
* `மூலிகை டீ'யில் `டேனின்' இல்லை. எனவே நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது மூலிகை டீ அருந்த லாம். மூலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச் சிக்குரிய செய்தி.
* `இஞ்சி டீ' கொஞ்சம் காரசாரமாக இருந்தாலுமë, இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாகப் புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாகப் பெண்களுக்கு.
* `அஸ்வகந்தா டீ' மனநிலையை உயர்த்தும், மனதுக்கும் உடம்புக்கும் ஓர் துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஊக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.
* டீயுடன் `ஸ்வீட் ரூட்' அல்லது `லீகோரைஸை' சேர்த்தால் வழுக்கை, பொடுகு, பற்சிதைவு, தொண்டைப் புண், காசநோய், உடம்பு துர்நாற்றம், மனஅழுத்தம், சோர்வு, தூக்கமில்லாமை, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளைக் குறைக்கும்.
* ஏலக்காய் டீயை எவர் விரும்ப மாட்டார்? அது இதமளிக்கும், வாநëதி உணர்வைத் தடுக்கும், ஜலதோஷம், இருமலுக்கு மிகவும் ஏற்றது. மனஅழுத்தத்தைக் குறைத்து உடலுக்குப் புத்துயிர் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏலக்காய் டீ நல்ல சுவையாகவும் இருக்கும்.டீ' எனப்படும் `தேநீர்' நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக' அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது தேநீர்ப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ' தவிர பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே...
* சூடான லவங்கப்பட்டை டீ, பெண்க ளுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மனஅழுத் தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டுச் சுதந்திரமாக உணர உதவும். மேலும், சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.
* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `மசாலா டீ'யும், `சிலோன் டீ'யும் இதமளிக்கும்.
`கிரீன் டீ'யில் உள்ள `பாலிபினால்கள்' அல்லது `பிளேவனாய்டுகள்' ஒட்டுமொத்த உடல்நலத் துக்கு நல்லது. குறிப்பாக புற்றுநோய் வராமல் தடுப்பதில். புற்றுநோய் போன்ற ஆபத்து களுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத் தடுக்கும் பணியில் டீயில் உள்ள `ஆன்டிஆக்சிடன்ட்கள்' உதவுகின்றன.
* `மூலிகை டீ'யில் `டேனின்' இல்லை. எனவே நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது மூலிகை டீ அருந்த லாம். மூலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச் சிக்குரிய செய்தி.
* `இஞ்சி டீ' கொஞ்சம் காரசாரமாக இருந்தாலுமë, இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாகப் புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாகப் பெண்களுக்கு.
* `அஸ்வகந்தா டீ' மனநிலையை உயர்த்தும், மனதுக்கும் உடம்புக்கும் ஓர் துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஊக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.
* டீயுடன் `ஸ்வீட் ரூட்' அல்லது `லீகோரைஸை' சேர்த்தால் வழுக்கை, பொடுகு, பற்சிதைவு, தொண்டைப் புண், காசநோய், உடம்பு துர்நாற்றம், மனஅழுத்தம், சோர்வு, தூக்கமில்லாமை, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளைக் குறைக்கும்.
* ஏலக்காய் டீயை எவர் விரும்ப மாட்டார்? அது இதமளிக்கும், வாநëதி உணர்வைத் தடுக்கும், ஜலதோஷம், இருமலுக்கு மிகவும் ஏற்றது. மனஅழுத்தத்தைக் குறைத்து உடலுக்குப் புத்துயிர் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏலக்காய் டீ நல்ல சுவையாகவும் இருக்கும்.
TIP 2: தோலை உரிக்காதீங்க!

சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அது கூடாது, அதன் மூலம் பல முக்கியமான ஊட்டச்சத்துகளை நீங்கள் இழக்க நேரிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
சாப்பாட்டு விஷயத்தில் அவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:
விலங்கு புரதம் வேண்டாம்
புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. இவை உங்களுக்கு ஒரு கனமான, வசதியற்ற நிலையை அளிக்கக்கூடும். நிலையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ஜீரணம் ஆக வேண்டும் என்பதற்காக அமிலவகைப் பானங்களை அருந்தும் வழக்கம் இருக்கிறது (உதாரணத்துக்கு பீட்சா சாப்பிட்ட பிறகு சோடா பருகுவது). `அசிட்டிக்' உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், `ஆல்கலைன்' உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது என்பதே.
பால்பொருட்களைத் தவிர்க்கலாம்
உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
எண்ணை உண்மை
நீங்கள் உங்கள் உணவில் எவ்வளவு எண்ணை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பாருங்கள். கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததே தவிர, `ரீபைண்ட் ஆயில்' அல்ல. அதில் நார்ச்சத்து இழக்கப்பட்டு விடுகிறது.
சமைக்கும் முறையை மாற்றுங்கள்
எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. `கட்லட்' போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு `ரோஸ்ட்' செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.
`முழுமையாக'ச் சாப்பிடுங்கள்
பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. காய்கறிகளுக்கு மணமூட்ட நாம் ஏன் மசாலாவையும், `சாஸ்களையும்' சேர்க்கிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையும அகற்றி விடுகிறீர்கள். முழு உணவாக நீங்கள் சமைக்கப் பழகினால் மசாலா சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாம். அதேபோல பட்டை தீட்டப்பட்ட பளபள அரிசிக்குப் பதிலாக பட்டை தீட்டப்படாத அரிசி நல்லது. மைதாவுக்குப் பதிலாக `ஆட்டா'வைப் பயன்படுத்தலாம்.
அதிகமாக அலச வேண்டாம்
காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீரில் அலசுவது நல்லதுதான். ஆனால் அதுவே அதிகமாகிவிட வேண்டாம். அப்படிச்செய்தால் நீங்கள் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும். காய்கறிகளை தண்ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன், சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.
பழங்களைத் தனியாகச் சாப்பிடுங்கள்
உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத்தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லதுதான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது. நீண்ட நேரம நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும்போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.
குரங்கைப் பின்பற்றுங்கள்
இயற்கையே நமக்குச் சிறந்த ஆசிரியர். அந்த வகையில் நமது நெருங்கிய உறவினரான குரங்கு நமக்கு வழிகாட்டுகிறது. எப்போதாவது குரங்கு ஆப்பிளைத் தோலை உரித்துச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
Tip 1: கொழுப்பில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று 2 வகை உண்டு
கொழுப்பில் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என்று 2 வகை உண்டு. நல்ல கொழுப்பு அதிகமாகவும் கெட்ட கொழுப்பு குறைவாகவும் இருந்தா தான் உடலுக்கு
நல்லது.
நல்ல கொழுப்பை HDL என்றும் கெட்ட கொழுப்பை LDL என்றும் சொல்வார்கள்.
ஏன் LDL ஐ கெட்டதுன்னு சொல்றாங்க?
நிறைய LDL கொழுப்பு இரத்தத்தில் கலந்து இருந்தா அது இரத்தக் குழாய்களின் உள் சுவரில் படிந்து இரத்ததின் போக்கை தடை செய்யும். இந்த படிமனானது எளிதில் கரையாதது. இது குறுகிய இரத்தக்குழாயில் உருவானால் ஆபத்து அதிகம். மாரடைப்பு, பக்க வாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதயத்துக்கும்
செல்லும் இரத்தம் தடைபட்டா மாரடைப்பு, மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபட்டா பக்க வாதம். LDL அதிகமா இருந்தா ஆபத்து.
உப்பு தண்ணி குழாயில் எப்படி உப்பானது கத்தியால வெட்டகூட முடியாத அளவுக்கு படியுதோ அது மாதிரி கெட்ட கொழுப்பு இரத்தக்குழாயில் படியும்.
HDL ஐ ஏன் நல்ல கொழுப்புன்னு சொல்றாங்க?
இது இரத்தக்குழாயில் படியும் கொழுப்பு படிமனை நீக்குகிறது/கரைகிறது, அவ்வாறு கரைத்த கொழுப்பை ஈரலுக்கு கொண்டு சென்று சுத்திகரிக்கிறது. அதனால் இரத்தக்குழாயில் கொழுப்பு படிமம் உருவாவது மட்டுபடுத்தப்படுகிறது. அதனால் இதயத்திலிருந்து வெளி செல்லும் இரத்தம் தடைபடாமல் செல்ல வழி செய்து மாரடைப்பு வராமல் நம்மை பாதுகாக்கிறது. HDL குறைவா இருந்தா
ஆபத்து.
Triglycerides - ட்ரைகிளிசரைட்
இது இன்னொருவகையான கொழுப்பு. இது அதிகமானால் நல்ல கொழுப்பின் அளவு குறைந்துவிடும். இந்த வகையில் இது நமக்கு கெடுதல் செய்கிறது. இந்த வகை கொழுப்பை நாம் உணவு மூலமாகவும் பெறுகிறோம் நம் உடலும் உற்பத்தி
செய்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இது அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.
நம் உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகரிக்க என்ன காரணம்?
1. கொழுப்பெடுத்த குடும்பத்தில் பிறந்தால் கொழுப்பு இல்லாம என்ன
செய்யும்? (சும்மா கிண்டலு). அதாவது மரபு வழி காரணமாக சிலருக்கு அதிக
கொழுப்பு இருக்கும்.
2. குண்டாக இருப்பது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்.
3. சோம்பேறியாக இருப்பது நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும்
4. வயது ஆக ஆக கொழுப்பு அதிகரிக்கும். (20 வயதிலிருந்து -- கல்லை
தின்னாலும் செறிக்கிற வயசு முடிஞ்சிபோச் :-( )
5. உணவு பழக்கங்கள் - கொழுப்பு அதிகமாக உள்ள உணவை உட்கொள்வதினால்
கொழுப்பு அதிகரிக்கும். (சுவையா இருக்கேன்னு பஜ்ஜி, வடை, பூரி போன்ற
எண்ணெய் பலகாராங்களை உட்கொள்ளாதீர்கள்)
6. பால் - மாதவிலக்கு சுழற்சி முடிந்த பெண்களுக்கு அவர்கள் வயதையொத்த
ஆண்களை விட கொழுப்பு அதிகமாகவும், மாதவிலக்கு சுழற்சி முடியாவிட்டால்
அவர்கள் வயதையொத்த ஆண்களை விட கொழுப்பு குறைவாகவும் இருக்கும். அதாவது
வயதான பெண்கள் & எல்லா ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
7. Type 2 சர்க்கரை நோய் (diabetes) HDL அளவை குறைக்கும்.
கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க சில வழிகள்.
1. சரியான உணவு பழக்கங்கள்.
2. உடற்பயிற்சி.
3. மது, புகை பழக்கத்தை தவிர்த்தல்.
எந்தவகையான உணவு நல்லது?
1. சோயாவை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
2. முட்டையின் கருவை முற்றாக தவிர்த்துவிடுங்கள்.
3. மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். கர்பிணிகளும், பாலூட்டும்
தாய்மார்களும் மீனை தவிர்க்கவும்.
4. சர்க்கரையை சேர்த்துக்கொள்வதை குறைத்துக் கொள்ளவும். இது
ட்ரைகிளிசரைடை (Triglycerides) குறைக்க உதவும்.
5. நிறைய காய் கறிகளும் பழங்களும் உட்கொள்ளுங்கள்.
6. கொழுப்புள்ள உணவு பக்கம் தலை வைத்து கூட படுக்காதீர்கள்.
7. கார்போஹைட்ரேட் உள்ள உணவை அதிகம் உட்கொள்ளாதீர்கள். அதாவது அரிசியை
குறைவாகவும் காய் கறிகளை அதிகமாகவும் சாப்பிடுங்கள்.
8. புரத சத்து அதிகம் உள்ள உணவை சேர்த்துக்கொள்ளுங்கள்.
9. நிறைய ஆரஞ்சு (சாத்துக்குடி) பழ சாறு உட்கொள்ளுங்கள். இது நல்ல
கொழுப்பை அதிகரிக்கும்.
10. வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.
11. பாதாம், நிலக்கடலை, காளான் உட்கொள்ளுங்கள். இது நல்ல கொழுப்பை
அதிகரிக்கும். பாதாம் மிகச் சிறந்தது.
எவ்வகையான உடற்பயிற்சி செய்யலாம்?
வேக நடை, நடை ஓட்டம் (jogging), சைக்கிள் ஓட்டுவது. வாரத்திற்கு 3 நாட்கள் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். ..
Have you read all the Tips below (more TIPs on next page) > more Tips in <2> <3> |